எதிர்கால இந்தியா பொருளாதாரத்தை ஸ்டார்ட்அப் நிறுவனம் தீர்மானிக்கும்: மத்திய அமைச்சர்!
எதிர்காலத்தில் இந்திய பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருக்கும்.
தற்போது மத்திய அரசு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்குவதற்கு பல்வேறு முனைப்புக் காட்டி வருகின்றது. மேலும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்கி வைக்கும் பொருட்டு பல்வேறு முக்கிய திட்டங்களையும் மத்திய அரசு அவர்களுக்கான நிதி உதவிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் டெல்லியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், வேளாண் மற்றும் பால் பல துறைகளில் தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தற்போது உள்ள மத்திய அரசின் சார்பில் குறிப்பாக வேளாண் துறையில் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அதிலும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையின் மூலம் கடந்த கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் தொடங்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எண்ணிக்கையானது 300 என்ற எண்ணிக்கையில் இருந்த இருந்து 70 ஆயிரமாக உயர்த்தப்பட்டு மற்றும் நிதி உதவியும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தை இத்தகைய நிறுவனங்கள் தான் எதிர்காலத்தில் தீர்மானிக்க இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் பொருளாதாரத்திற்கு உற்ற துணையாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பிற்காலத்தில் விளங்கும் என்பது நிச்சயம்.
நிறுவனங்களை தொடங்குவதில் பல்வேறு வகையான கருத்துக்களை குவிப்பதில் இந்தியா தற்போது மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும், மேலும் அறிவியல், கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இதன்மூலம் இளைஞர்களின் துடிப்பான எண்ணங்களை செயலாக்கும் திறன்களை உருவாக்க இது துணை நிற்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy:Maalaimalar