உள்நாட்டிலேயே தயாராகும் அடுத்த தலைமுறை தாக்குதல் கட்டமைப்பு: உலகின் முதல் நாடாக சாதிக்கப்போகும் இந்தியா!

உள்நாட்டிலேயே தயாராகும் அடுத்த தலைமுறை தாக்குதல் கட்டமைப்பு: உலகின் முதல் நாடாக சாதிக்கப்போகும் இந்தியா!

Update: 2021-02-04 20:05 GMT

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்), ஸ்டார்ட்-அப் நிறுவனத்துடன் இணைந்து அடுத்த தலைமுறை  செயற்கைக்கோளை உருவாக்கி வருவதாகக் கூறியது. இது உலகின் முதல் வகை செயற்கை கோளாகும். HAL இயக்குனர் (Engg + R & D) அருப் சாட்டர்ஜி கூறுகையில், இந்த செயற்கைக்கோள் சூரிய சக்தியால் இயங்க கூடியதாக இருக்கும். மேலும் 2-3 மாதங்களுக்கு 70,000 அடி உயரத்தில் ஆளில்லாமல் பறந்து அதற்கான பணியை மேற்கொள்ளும்.

தொழில்நுட்பத்தில் வளர்ச்சியின் ஒரு பகுதியாக, எச்.ஏ.எல் ஆளில்லா விமானங்களையும், ஜெட் விமானங்களைக் கொண்ட வாகனங்களையும் தயாரிப்பது அமெரிக்க ஸ்கைபிராக் திட்டத்திற்கு ஒத்ததாக இருக்கும். இந்த திட்டம் நாட்டின் இராணுவ வேலை திறன்களை பலப்படுத்தும்.

"ஆளில்லா விமானம் எல்லைக்குள் இயங்கும் மற்றும் ஆளில்லா விமானம் எதிரி மண்டலத்திற்குள் நுழைந்து எதிரி எல்லைக்குள் ஆழமாக தாக்குதல்களை நடத்தக்கூடிய திட்டத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம்" என்று சாட்டர்ஜி விரிவாக விளக்கினார்.

மேலும் பேசிய அவர், இந்த அமைப்பில் ஹண்டர் மற்றும் ஆல்பா போன்ற ஆயுதங்களை சுமந்து செல்லும் கப்பல் இருக்கும். அந்த கப்பல்களில் எல்.சி.ஏ அல்லது ஜாகுவார் அல்லது பிற போர் திறன்களை கொண்ட விமானங்கள் இருக்கலாம்" என்று சாட்டர்ஜி கூறினார்.

இந்த தொழில்நுட்பத்திற்கு ஒருங்கிணைந்த ஏர் டீமிங் சிஸ்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. நான்கு தன்னாட்சியான ஆளில்லா வான்வழி வாகனங்கள் கொண்டிருக்கும். இது எதிரி எல்லைக்குள் 700 கிலோமீட்டருக்கு ரேடார் கண்களில் சிக்காமல் நுழையும்.

தன்னிச்சையாக செயல்பாடுகளைச் செய்யக்கூடிய இந்த ஆளில்லா வான்வழி வாகனங்கள், அனைத்து சூழ்ச்சி திறன்களையும் கொண்டிருக்கும். இதன் மூலம்  உடனடியாக 700 கிலோமீட்டர் தொலைவில் இலக்கை அடையலாம் அல்லது 350 கிலோமீட்டருக்குச் சென்று திரும்பி வரலாம். இது தேவைப்பட்டால் வெடிமருந்துகளையும் ஏவுகணைகளையும் கொண்டு செல்லும்" என்று சாட்டர்ஜி கூறினார்.

ஒப்பந்தத்தின்படி, எச்ஏஎல் எல்சிஏ விநியோகத்தை இன்று முதல் 36 மாதங்களுக்குள் தொடங்கும் என்று கூறியுள்ளார். "முதல் டெலிவரி மார்ச் 2024 க்குள் இருக்கும். முதல் ஆண்டில், 2 விமானங்கள் டெலிவரி செய்யப்படும்.

Similar News