சீனாவை ஓரங்கட்டிவிட்டு பிரம்மபுத்ராவில் அணை கட்டும் இந்தியா.!

சீனாவை ஓரங்கட்டிவிட்டு பிரம்மபுத்ராவில் அணை கட்டும் இந்தியா.!

Update: 2020-12-02 07:22 GMT

தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள திபெத் வழியாக பாயும் பிரம்மபுத்ரா ஆற்றில் புதிய நீர் மின்நிலையம் அமைப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நமது அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் இருந்து பாயும் பிரம்மபுத்ரா நதி நம் நாட்டின் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. திபெத்தில் இந்த நதியின் குறுக்கே நீர் மின் நிலையம் அமைக்கப் போவதாக சீனா சமீபத்தில் கூறியிருந்தது.

இந்நிலையில், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நீர் தடுப்பாடு ஏற்படுவதை தடுக்கவும் கிடைக்கும் கூடுதல் நீரை சேமித்து வைக்கவும் அருணாசலப் பிரதேசத்தில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.


மேலும் இங்கு நீர்மின் நிலையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்டத்தை மத்திய அரசின் ஜல்சக்தி துறை உருவாக்கியுள்ளது. விரைவில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. சீனாவின் அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு முறியடித்து விடுகிறது. இதனால் இந்தியா மீது சீனா கடும் கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ இந்தியாவின் உரிமைகளை எந்த நாட்டிற்காகவும் விட்டுக்கொடுக்காமல் பாதுகாத்து வருகிறார் நமது பிரதமர் நரேந்திர மோடி.

Similar News