கொரோனா பற்றி பொய் தகவல்கள் பகிரப்படும் நாடுகளில் இந்தியா டாப் - அதிர்ச்சி!

138 நாடுகளில் கொரோனா தொற்று பரவல் குறித்த தகவல்கள் மற்றும் மூல பகுப்பாய்வு என்று பெயரிடப்பட்ட ஆய்வு சாகே நூலக சங்கம் மற்றும் நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பு இதழ் வெளியிட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட 138 நாடுகளில் பகிரப்பட்ட 9,657 தவறான தகவல்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

Update: 2021-09-15 12:48 GMT

138 நாடுகளில் கொரோனா தொற்று பரவல் குறித்த தகவல்கள் மற்றும் மூல பகுப்பாய்வு என்று பெயரிடப்பட்ட ஆய்வு சாகே நூலக சங்கம் மற்றும் நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பு இதழ் வெளியிட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட 138 நாடுகளில் பகிரப்பட்ட 9,657 தவறான தகவல்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அதில் பல நாடுகளில் கொரோனா குறித்து பகிரப்படும் தவறான செய்திகள் உண்மையானதா அல்லது பொய்யானதா என்று கண்டறியும் வகையில் 94 அமைப்புகள் இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டது. இதில் இணையப் பயன்பாடு அதிகமுள்ள காரணத்தால் கொரோனா பற்றி பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்திருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இணையம் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும், சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துவதாலும் இது நடைபெற்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இது பற்றிய வெளியான ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் அதாவது சமூக வலைதளங்கள் மூலமாக 18.07 சதவீத பொய்யான தகவல்கள் இந்தியாவிலிருந்து பரப்பப்பட்டுள்ளது.

அதில் கொரோனா பற்றிய பொய்யான தகவல்களும் பகிரப்படுவதாகவும், இந்தியாவில் மட்டும் 15.94 சதவீதம், அமெரிக்காவில் 9.44 சதவீதம், பிரேசில் 8.57 சதவீதமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source Image Courtesy: Dina Thanthi

Tags:    

Similar News