கொரோனா தடுப்பூசி: 80 கோடியை எட்டும் சாதனை, மக்களின் ஒத்துழைப்பு காரணமா ?
இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80 கோடி , மக்களின் ஒத்துழைப்பு காரணமாக நிகழ்ந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி தற்போது 80 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது. இது இந்தியாவில் உள்ள மக்களின் முழு ஒத்துழைப்பும் நிகழ்த்தப்பட்ட ஒரு சாதனையாகவும் கருதப்படுகிறது. மத்திய அரசாங்கம் ஏற்கனவே தடுப்பூசி திட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வந்தது. மக்களிடம் தொடக்ககாலத்தில் தடுப்பூசி குறித்த பயமும் அச்சமும் இருந்துவந்த ஒரு சூழ்நிலையில் தற்பொழுது, அதற்கு நேர் மாறாக அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் சூழலுக்கு வந்துள்ளோம். மக்களின் முழு ஒத்துழைப்புடன் மட்டும்தான் இது நிகழ்ந்துள்ளது என்று பரவலாக பேசப்படுகின்றது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இதைப் பற்றிக் கூறுகையில், "இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 80 கோடியைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 85,42,732 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 79,15,457 முகாம்களில் 80,43,72,331 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நம் நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 97.68 சதவீதமாக உள்ளது" என்றும் கூறியது.
அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் மக்களும் ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலம் மட்டும்தான் இதுபோன்ற சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதற்கு இந்தியா ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மேலும் தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் மூலமாக தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறந்து விடக்கூடாது என்றும் மத்திய அரசு சங்கத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Input & Image courtesy:pragativadi