இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு தடுப்பூசி !மத்திய அரசு ஒப்புதல் !
இந்தியாவில் தற்பொழுது ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் அளித்து உள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பதற்கு தடுப்பூசிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. எனவே தடுப்பூசிகளின் தேவைகளும் அதிகரித்து உள்ளன. அந்த வகையில் தற்போது வரை இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, வெளிநாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தின் தடுப்பூசிகளை இந்தியாவில் அனுமதிக்க கோரி விண்ணப்பித்து வருகின்றன.
அந்த வகையில் தற்பொழுது சர்வதேச மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் குறிப்பாக ஒரு டோஸ் மட்டும் செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி 85% செயல்திறனுடன் இருப்பது, பல்வேறு நாடுகளில் நடத்திய சோதனையில் தெரியவந்தது. இந்த தடுப்பூசி நோய்க்கு எதிராக மட்டுமின்றி மிகவும் பாதுகாப்பாக செயல்படும் என்றும் பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன. இதை தொடர்ந்து அந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும்படி ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளது.
இந்நிலையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். எனவே தடுப்பூசிகள் தாராளமாக இனி இந்தியா முழுவதும் கிடைக்கும் என்று இந்திய மக்களின் சார்பில் எதிர்பார்க்கப்படும் ஒரு விஷயமாக உள்ளது.
Image courtesy: India Today news