இந்தியாவில் மற்றொரு மிகப்பெரிய மைல்கல்: பிரதமர் பெருமிதம்!
இந்தியாவுடன் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு இஸ்ரோ நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பாராட்டை தெரிவித்திருக்கிறார்.
இந்திய- பூடான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது பாராட்டு பதிவு செய்து இருக்கிறார். மேலும் இது பற்றி அவர் பகிர்ந்து கொள்கையில் செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது, இரு நாட்டு மக்களுக்கிடையான சிறப்பான உறவிற்கு சிறந்த சான்றாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்தியாவின் கண்காணிப்பு செயற்கைக்கோள் இந்திய-பூடான் கூட்டு தயாரிப்பான ஐ.என்.எக், துருவா உள்ளிட்ட ஒன்பது செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்துகிறது. இதற்காக இந்திய மக்கள் சார்பில் என்னுடைய பாராட்டுக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், PSLV C- 54 ராக்கெட் திட்டம் வெற்றி அடைந்ததற்காக இஸ்ரோ மற்றும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்த ராக்கெட்டுடன் அனுப்பப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் நமது கடல் சார்ந்த பகுதிகளை கண்காணித்து கொள்ள உதவும். இந்த திட்டம் மூலமாக பிக்கிளாஸ், துருவா உள்ளிட்ட இந்திய நிறுவனங்களின் மூன்று செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது இந்திய விண்வெளி தொழில்நுட்பத் திறமையை முழுமையாக உணர்ந்து கொள்ளக்கூடிய வகையிலான புதிய யுக்தியின் தொடக்கமாக அமைந்துள்ளது. மேலும் இந்தியாவுடன் பூடானும் கூட்டாக தயாரித்த செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு இருக்கிறது. இரு நாட்டு மக்களிடையே சிறப்பான உறவுக்கு இது சான்றாக இருக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டு இருக்கிறார்..
Input & Image courtesy: Oneindia