இந்தியாவில் சோலார் எரிசக்தி முயற்சிகள் மாபெரும் வெற்றி - அறிக்கைகள் கூறுவது என்ன?
இந்தியாவில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி நிகழ்ச்சிகளின் முயற்சிகள் தற்போது வெற்றி அடைந்துள்ளது.
மத்திய அரசு புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வளங்களை அதிகரிக்க முயற்சி காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இத்தகைய சூழ்நிலையில் நாட்டில் ஏற்பட்ட பெரும் தொற்று காரணமாக புதுப்பிக்கக்கூடிய வளங்கள் உற்பத்தி செய்வதில் பெரும் தேக்க நிலை இருந்து வந்தது. தற்சமயம் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களை மீண்டும் சமநிலைக்குக் கொண்டுவருவதாக கடந்த ஆண்டு மத்திய அரசு பல்வேறு புதுப்பிக்கக்கூடிய வளங்கள் உற்பத்தி செய்யும் நிலையங்கள் மானிய தொகையை கூடுதலாக அறிவித்தது.ஈடுபட்டுள்ளது இந்த மானியத் தொகைகளை ஊன்றுகோலாக கொண்டு பல்வேறு நிறுவனங்கள் தற்போது இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளங்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த புதுப்பிக்கக்கூடிய வளங்கள் 15.4 ஜிகாவாட் ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் புதுப்பிக்கக்கூடிய வளங்கள் ஐ அதிகரிப்பது எதிர்கால சந்ததியினருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்தியா தற்போது சூரிய மின் அழுத்த நிலையங்களை உற்பத்தி செய்யும் மூன்றாவது பெரிய நாடாக இருந்து இருப்பதும் இதற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது.
மேலும் மத்திய அரசின் சார்பில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு 18,100 கோடி ரூபாய் மானியமாக தொகையை உயர்த்தி இருப்பது இத்தகைய முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. புதுப்பிக்கத்தக்க வளங்களான சூரிய மின் சக்தியை அதிக அளவில் நாம் பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக புதுப்பிக்கத்தக்க இயலாத வளங்களின் கையிருப்பை நீண்ட நாட்களுக்கு நம்மளால் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதை இதன் மூலம் தெரியவருகிறது.
Input & Image courtesy: Polimer News