உலக அளவில் சர்க்கரை நோய் ஆராய்ச்சி... இந்தியா முன்னிலை... மத்திய அமைச்சர் தகவல்!

உலக அளவில் சர்க்கரை நோய் ஆராய்ச்சியில் இந்தியா முன்னிலை வகிக்கும் என மத்திய அமைச்சர் தகவல்.

Update: 2023-04-17 02:17 GMT

உலக அளவில் சர்க்கரை நோய் ஆராய்ச்சியில் இந்தியா முன்னிலை வகிக்க தயாராக உள்ளதென மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். "நீரிழிவு இந்தியா" என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற 3 நாள் உலக நீரிழிவு மாநாட்டில் தொடக்க உரையை நிகழ்த்திய புகழ்பெற்ற நீரிழிவு நிபுணரான டாக்டர் ஜிதேந்திர சிங், பல தலைமுறைகளாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் டைப் 2 நீரிழிவு நோயை பெற்றுள்ளது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


சுகாதாரத்திற்கு அதிக முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டிய அமைச்சர், இரண்டு ஆண்டுகளில், இந்தியா கொரோனா தொற்றுநோயை மிகச் சிறப்பாகக் கையாண்டதாகக் கூறினார். உள்நாட்டு மருத்துவ ஆராய்ச்சிக்கு பிரதமர் மோடி அளித்த ஆதரவை குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், பாரம்பரிய இந்திய மருத்துவ அறிவை நவீன அறிவியலுடன் இணைத்து, பல்வேறு மருத்துவ முறைகளை ஒருங்கிணைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதெனக் கூறினார்.


சர்க்கரை நோயைத் தடுப்பது சுகாதாரப் பாதுகாப்பு மட்டுமல்லாமல், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கடமை எனக் கூறி டாக்டர் ஜிதேந்திர சிங் தனது உரையை முடித்தார். ஏனெனில் இந்தியாவின் மக்கள்தொகையில் 70% பேர் 40 வயதுக்குட்பட்டோர் என்பதால், அவர்களின் ஆற்றலை வீணடிக்க அனுமதிக்க முடியாது எனவும் டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News