'என் மண் என் தேசம்' பிரச்சாரத்திற்காக இந்தியா உலக சாதனை -கின்னஸில் இடம்!
'என் மண் என் தேசம்’ பிரசாரத்தின்போது அதிக செல்ஃபிகள் எடுத்து இணையத்தில் பதிவு செய்து உலக சாதனை படைத்ததாக இந்தியாவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
'என் மண் என் தேசம்’ பிரசார நிகழ்ச்சி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாங்கள் கொண்டு வந்த மண் கலசங்களுடன் 1,042,538 பேர் கைப்பேசி மூலம் செல்ஃபி எடுத்து பதிவு செய்தனர். இது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் புதிய சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சீனாவில் 2016-ஆம் ஆண்டில் 100,000 பேர் செல்ஃபி எடுத்து இணையத்தில் பதிவு செய்ததே சாதனையாக, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கின்னஸ் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.