'அக்னிபத்' குறித்து விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறிய முக்கிய தகவல் என்ன?

அக்னிபத் திட்டத்தின் கீழ் வரும் 24-ஆம் தேதி முதல் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தொடங்க இருப்பதாக இந்திய விமானப்படை தளபதி பி.ஆர்.சவுத்ரி அறிவித்துள்ளார்.

Update: 2022-06-18 02:03 GMT

'அக்னிபத்' திட்டத்தின் கீழ் வரும் 24-ஆம் தேதி முதல் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தொடங்க இருப்பதாக இந்திய விமானப்படை தளபதி பி.ஆர்.சவுத்ரி அறிவித்துள்ளார்.

அக்னிபத் என்ற திட்டத்தை கடந்த 3 தினங்களுக்கு முன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார், பின்னர் எதிர்க்கட்சிகள் அதனை வழக்கம் போல் எதிர்க்க நாட்டின் சலில பகுதிகளில் போராட்டம் வெடித்தது.

இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய இந்திய விமானப்படை தளபதி பி.ஆர்.சவுத்ரி கூறியதாவது, 'அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவதற்கான நுழைவு வயது 21லிருந்து 23 ஆக உயர்த்தியது வரவேற்கத்தக்கது, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை இந்திய விமானப்படை வரும் 24ஆம் தேதி தொடங்கும்' என அதிரடியாக அறிவித்தார்.

அதே போன்று கடற்படையும் இந்த 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Source - News 18 Tamil

Similar News