சீன எல்லையில் உள்நாட்டு தயாரிப்புகளை களமிறக்கும் இந்திய ராணுவம்!

சீன எல்லையில் உள்நாட்டு தயாரிப்புகளை களமிறக்கும் இந்திய ராணுவம்!

Update: 2021-01-02 18:24 GMT
லடாக்கில் உள்ள பாங்கோங் ஏரி பகுதியில் தனது இருப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்திய இராணுவம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 12 படகுகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அவை முழுமையாக ஆயுதம் ஏந்தி ரோந்து பணி மற்றும் விரைவாக பாங்கோங் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வீரர்களை அனுப்ப பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய இராணுவம் நேற்று கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்துடன் 12 விரைவான ரோந்து படகுகளுக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதற்கான டெலிவரி மே 2021 முதல் தொடங்கும்.

"படகுகள் கார்ப்ஸ் ஆப் இன்ஜினியர்களால் இயக்கப்படும் மற்றும் பராமரிக்கப்படும். இந்த படகுகள் சீன எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பரந்த நீர்நிலைகள் மற்றும் அதிக உயரமுள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதில் மிக முக்கியமானதாக இருக்கும்" என ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக மற்றும் கையாளக்கூடிய படகுகளில் அதிநவீன உள் அமைப்புகள் பொருத்தப்படும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். இந்தியாவுடனான மோதலின் ஆரம்ப கட்டத்தில், சீன வீரர்கள் ஃபிங்கர் 5 மற்றும் ஃபிங்கர் 6’க்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு வீரர்களை அனுப்ப ஏராளமான படகுகளை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Similar News