சிறு தொழில்களுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் தனி நிதி: மக்களவையில் நிதி அமைச்சர் அறிவிப்பு!
சிறு தொழில்களுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் தனி நிதி
மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தற்பொழுது தாக்கல் செய்து கொண்டிருக்கிறார். விவசாயம் முதல் பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களில் வளர்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட் தாக்கலில் இடம் பெற்று இருக்கிறது. நொடிந்து போகும் நிலையில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு புத்துயிர் கொடுக்கும் தனி விதி உருவாக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்திருக்கிறார்.
குறிப்பாக அழிந்து வரும் நிலையில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய கவனம் கொடுத்து அவற்றை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசாங்கம் முயற்சித்து வருகிறது. நொடிந்து போகும் நிலைமையில் உள்ள சிறு தொழில் நிறுவனங்கள் குறிப்பாக ஏழை எளிய மக்களால் நடத்தப்பட்டு வருகிறது. அவற்றை மீண்டும் நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதற்காக தனி நிதி உருவாக்கப்பட்டு முக்கிய கவனிப்பு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.