மனிதக் கழிவுகளை அகற்ற 100% இயந்திர பயன்பாடு: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சம்!
மனிதக் கழிவுகளை அகற்றும் முயற்சியில் 100% இயந்திர பயன்பாடு இருக்கும்.;
மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தற்பொழுது தாக்கல் செய்து கொண்டிருக்கிறார். விவசாயம் முதல் பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களில் வளர்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட் தாக்கலில் இடம் பெற்று இருக்கிறது. சமுதாயத்தில் இப்போ இருக்கும் மிக முக்கிய பிரச்சனைக்காக மனிதக் கழிவுகளை அகற்றும் முயற்சியின் போது பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் இறக்கும் ஒரு நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.
அவற்றைப் போக்கும் மிக முக்கிய முயற்சியாக அனைத்து நகரங்களிலும் இயந்திரங்கள் மூலமாக மனிதக் கழிவுகளை அகற்றும் முறை செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட் தாக்கல் இன் போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தன்னுடைய பட்ஜெட் தாக்கல் போது கூறுகையில், நாட்டில் உள்ள அனைத்து நகரங்களிலும் மனிதக் கழிவுகளை அகற்ற தற்பொழுது 100% இயந்திரங்களை கொண்டுவரும் முயற்சி மத்திய அரசு மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.