இந்தியாவின் கச்சா எண்ணெய் பற்றாக்குறை இல்லை - நிர்வாகத்தில் அசத்தும் மத்திய அரசு

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையான அளவில் இருப்பு உள்ளதாகவும் வணிகத்தில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என்று மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார்.

Update: 2022-12-02 04:52 GMT

பண வீக்கத்தில் சிறப்பாக கையாளுவதால் இந்தியாவின் முடிவுகள் நிச்சயம் வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். உணவு பொருள் விலகியத்தை கட்டுப்படுத்த சிறப்பான செயல் திட்டத்தைக் கொண்டு கொண்டுள்ளதால் பணவீக்கத்தை சிறப்பாக கையாளுவதில் இந்தியா வெற்றி பெறும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். புதன்கிழமை நடைபெற்ற ராய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் என்று நிகழ்வில் காணொளி வாயிலாக மத்திய நிதி அமைச்சர் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில், கச்சா எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களின் பணவீக்கத்தை சிறப்பாக கையாளுவது நாம் வெற்றி பெறுவோம் ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி பணவிக்கம் குறைந்து வருகிறது.


அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ அல்லது மத்தியிலோ பணவீக்கம் கட்டிருக்கும் வெளிப்புற பண வீக்கத்தின் தீர்மானங்கள் தற்போது கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவின் வேளாண் பொருட்கள் விநியோகம் எரிபொருள் உள்ளிட்டவற்றை பொறுத்தவரையில் நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அடுத்த ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி காணும் என்றும் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.


மேலும் இந்தியாவில் இருந்து சில பொருட்கள் ரஷ்யாவில் இறக்குமதி செய்வது குறித்த அமைச்சர் விளக்கம் கூறினார். குறிப்பாக இந்தியா ஏற்கனவே ரூபாய் வர்த்தக செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது பல சகாப்தகளாகவே பயன்பாட்டில் உள்ளது. அதன்படி வாங்குவதும் விற்ப்பதும் நடைபெற்று வருகிறது. உரம் மற்றும் எரிபொருளை நாம் கொள்முதல் செய்யும் வழியில் இந்தியாவில் இருந்து சில பொருட்களை விற்பனை செய்ய அவற்றை ஈடு கட்ட வேண்டிய தேவை இருக்கிறது. தேவைப்படும் போது இந்த செயல் திட்டத்தை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம் என்று மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News