ராணுவ வலிமையை அதிகரிக்காமல் இருந்திருந்தால்? கால்வன், டோக்லாம் பகுதியை இழந்திருப்போம்! ராணுவ துணை தளபதி !
இந்தியா தனது ராணுவ வலிமையை அதிகரிக்க தேவையான முதலீடுகளை செய்யாமல் இருந்திருந்தால், கார்கில் போர், கால்வன் மற்றும் டோக்லாம் மோதல்களின்போது நாம் தோற்றிருப்போம் என்று ராணுவ துணை தளபதி சி.பி.மொகந்தி பரபரப்பான தகவலை கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பும் பெரிய சவாலாக மாறியிருக்கும் என்பதையும், வடகிழக்கு மாநிலங்களில் நக்சல்களின் கொட்டம் அதிகரித்திருக்கும் என்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
மேலும், ராணுவத்திற்கு கூடுதல் பணம் செலவழிக்கப்படுவது பற்றிய விவாதங்களுக்கு பதில் அளித்த அவர், திபெத்திடம் வலிமையான ராணுவம் இருந்திருந்தால் அதனை ஒருபோதும் ஆக்கிரமித்திருக்காது எனக் கூறினார். அது மட்டுமின்றி டோக்லாம் மற்றும் கால்வன் தாக்குதல்களில் பெற்ற வெற்றி, சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெரிய மரியாதையை கொடுத்திருப்பதாகவும் கூறினார்.
Source, Image Courtesy: Polimer