நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி: ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு!

நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி மீண்டும் கணித்துள்ளது.

Update: 2023-07-21 03:21 GMT

கடந்த நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 6.4 சதவீத வளர்ச்சி அடையும் என்று கடந்த ஏப்ரல் மாதம் ஆசிய வளர்ச்சி வங்கி கணித்து இருந்தது. இந்நிலையில் நேற்று வெளியிட்ட கணிப்பில் அதே 6.4 சதவீத பொருளாதார வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்துள்ளது.


கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் நுகர்வு தேவை அதிகரித்து வருவதால் பொருளாதார வளர்ச்சி குறையாது என்று கூறியுள்ளது. இருப்பினும் சர்வதேச பொருளாதார மந்த நிலையால் வணிகப்பொருட்கள் ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் பணம் வீக்கம் கணிப்பை 5 சதவீதத்திலிருந்து 4.9 சதவீதமாக குறித்துள்ளது.


SOURCE :DAILY THANTHI

Similar News