இலங்கையில் இந்திய வெளியுறவுத்துறை கச்சத்தீவு மீட்பு பேச்சுவார்த்தை? பீதியில் எதிர்க்கட்சிகள்!
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான இந்திய குழுவினர் நேற்று இலங்கை சென்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்பின்போது கச்சத்தீவை மீட்பது பற்றிய பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதா? என்று இலங்கை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இலங்கையில் பொருளாதாரம் சீர்கெட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு இந்தியா பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி மற்றும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை இந்தியா வழங்கியுள்ளது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு நேற்று (ஜனவரி 23) சென்றது. இந்த குழுவால் மத்திய நிதியமைச்சக பொருளாதார துறை செயலாளர் அஜய்சேத், தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் உள்ளிட்டோரும் இருந்தனர்.
இக்குழுவினர் கொழும்பில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோரை சந்தித்து பேசியது. அப்போது இலங்கைக்கு பொருளாதார உதவிகள் மற்றும் இருதரப்பு உறவுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் இலங்கை எம்.பி. ஒருவர் பேசும்போது இலங்கைக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் இந்தியா கடன் கொடுப்பதும் இல்லை. ஒரு வேளை கச்சத்தீவை மீண்டும் பெறுவதற்காகவா இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு வந்தனரா? என்பதை அரசு கூற வேண்டும். இவ்வாறு அந்த எம்.பி. கூறினார்.
Source, Image Courtesy: One India Tamil