வெளிநாட்டில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.10 லட்சம் பெறலாம்: புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசு!
உள்துறை அமைச்சகம் வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தில் தற்போது புதிய திருத்தம் கொண்டு வந்துள்ளது. வெளிநாட்டில் தங்கியிருக்கும் உறவினர்களிடம் இருந்து அதிகாரிகளுக்கு எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்காமல் இந்தியர்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் வரையில் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முந்தைய வரம்பு ரூ.1 லட்சமாக மட்டுமே இருந்தது. இந்த தொகையை விட அதிகமாக இருந்தால் தனிநபர்கள் அரசாங்கத்திற்கு ஒரு மாதத்தில் இருந்து 90 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
அதன்படி வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த விதிகளை கடந்த வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வெளிநாட்டு பங்களிப்பு விதிகள் 2011 விதி 6இல், ஒரு லட்சம் ரூபாய் என்பதற்கு பதிலாக 10 லட்சம் ரூபாய் எனவும் மாற்றப்பட்டுள்ளது. எனவே ஆண்டுதோறும் வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்களிடம் ரூ.10 லட்சம் வரையில் பெறலாம். இந்த புதிய விதிமுறைகளுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Source, Image Courtesy: Asianetnews