இந்திய நிதியுதவியின் கீழ் 250 இலங்கை மக்களுக்கு உணவு தானியங்கள்: வழங்கிய மத்திய இணை அமைச்சர்!

அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார் மத்திய இணை அமைச்சர் டாக்டர் L. முருகன்.

Update: 2023-02-11 09:50 GMT

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய அமைச்சர் டாக்டர் L. முருகனுக்கு யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா - இலங்கை கூட்டுறவின் மூலம் யாழ்ப்பாணத்தில் உருவான கைலாசசார மைய துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இலங்கை சென்றுள்ளார்.


யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடைந்த மத்திய அமைச்சருக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜாவை அமைச்சர் சந்தித்தார். அப்போது அபிவிருத்தி ஒத்துழைப்பில் யாழ்ப்பாணத்திற்கு இந்தியா வழங்கும் முக்கியத்துவம் குறித்து இச்சந்திப்பில் சுட்டிக்காட்டியிருந்த மத்திய அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்கு முதலிடம் என்றக் கொள்கையின்கீழ் தற்போது இந்தியா தொடர்ந்து வழி நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.


பின்னர் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் உள்ள அப்துல்கலாம் சிலைக்கு அமைச்சர் மமாலையணிவித்து பின்னர் மரியாதை செலுத்தினார். மேலும் இந்திய நிதியுதவியின் கீழ் 250 இலங்கை மக்களுக்கு உணவு தானியங்களையும் அவர் வழங்கினார். தொடர்ந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தையும் அமைச்சர் முருகன் பார்வையிட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News