தாய் நாட்டிற்கான கடமைகளை செய்ய மறக்க வேண்டாம் - ஜனாதிபதி அறிவுறுத்தல்!

தாய் நாட்டிற்காக செய்ய வேண்டிய கடமைகளை மறக்க வேண்டாம் என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-10-11 02:24 GMT

ஜார்கண்டில் உள்ள பஞ்சாப் இன்ஜினியரிங் கல்லூரியின் 52 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழா ஆகியவற்றில் ஜனாதிபதி திரௌபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு நிபுணர்கள் வழங்கிய பஞ்சாப் இன்ஜினியரிங் கல்லூரியை பாராட்டினார். முன்னாள் இஸ்ரோ தலைவரும் இந்தியாவின் ஆய்வு தந்தையுமான சதீஷ் தவான், பிரபல கல்வியாளரும் டெல்லி ஐ.ஐ.டி நிறுவனமான டேக்ரா, ஏவுகணை தொழிற்சட்ட வல்லுனர் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்.


 பல்வேறு தலைவர்கள் இந்த கல்வி நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டார். இந்த கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் துறையின் முன்னாள் மாணவியான கல்பனா சாவ்லா இந்தியாவின் முதலாவது பெண் விண்வெளி வீரர் என்று பெருமையை பெற்றுள்ளார். அத்துடன் அறிவியலுக்கு அறிவியலுக்காகவே தன்னை தியாகம் செய்யவும் உத்வேகமும் நாட்டுக்கு அளிக்கிறார். அவரது தினமான நினைவாக இந்த கல்லூரியில் புவியியல் தொழில்நுட்பத் துறை இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.


நாட்டின் வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்த தொழில்நுட்பத்தில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் வாழ்வில் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் தாய் நாட்டுக்காக தங்கள் கடமையை செய்ய ஒருபொழுதும் மறக்கக்கூடாது. ஏனெனில் மாணவர்கள் தான் நாளைய இந்தியாவின் தூண்கள் எண்ணில் அடங்க வாய்ப்புகள் மற்றும் சாத்திய கூறுகள் நிறைந்த இந்து உலகில் வாழும் அவர்கள் வாய்ப்புகளை வெற்றியாகவும், சாத்தியக்கூறுகளை உறுதியாகவும் மாற்றும் திறன் கொண்டவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தேச தந்தையின் விழுமியங்களை நடைமுறைப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் குறிப்பாக இளைஞர்களின் தார்மீக கடமையாகும் என்று ஜனாதிபதி திரௌபதி அவர்கள் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News