ரயிலில் சத்தமாக பாட்டு போட்டு பயணிகளை தொந்தரவு செய்பவரா? இனிமேல் நீங்கள் உஷார்!
ரயில் பயணத்தின் போது பலர் சத்தமாக பேசுவதும், அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் விதமாக பாட்டு கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் தற்போது புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நோயாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள், குழந்தைகள் என ரயிலில் பயணம் மேற்கொள்வர். அது போன்ற சமயங்களில் தேவையின்றி கூச்சல் போட்டுக்கொண்டும், சத்தமாக மொபைலில் பாட்டு வைத்து பலர் தொந்தரவு செய்வு வாடிக்கையாகவே உள்ளது. இது போன்ற நேரங்களில் நோயாளிகள் மற்றும் குழந்தைகள், சிறுவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்து விடுகிறது. இது போன்றவற்றில் இருந்து பயணிகளை பாதுகாக்க ரயில்வே நிர்வாகம் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
இனிமேல் ரயில்களில் சத்தமாக பாட்டுக் கேட்டுக்கொண்டே சென்றாலும், சத்தம் போட்டு பேசியிருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மற்ற பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படும் பட்சத்தில் ரயில் ஊழியர்கள்தான் அதற்கான பொறுப்பேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ரயில் ஊழியர்கள், ஆர்.பி.எஃப் வீரர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளிட்டோர் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படாது வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த தகவலை மேற்கு ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Source,Image Courtesy: Maalaimalar