அமெரிக்காவிற்கு நிகரான இந்திய சாலை உள் கட்டமைப்பு - நிதின் கட்கரி கூறிய சூப்பர் தகவல்!
அமெரிக்காவிற்கு நிகராக உத்தர பிரதேசத்தில் சாலை கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவுக்கு நிகரான சாலை இந்தியாவில் உருவாக்கப்படும் குறிப்பாக தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் தெரிவித்து இருக்கிறார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் பொழுது அவர் கூறுகையில், 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் உத்தரபிரதேசத்தில் சாலை உள்கட்டமைப்பு வசதி அமெரிக்காவிற்கு நிகராக உருவாக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வரிடம் உறுதி அளித்து உள்ளேன் என்று கூறி தன்னுடைய உரையை தொடங்கினார்.
தற்போது இந்தியாவின் சாலை மேம்பாட்டு வசதிகள் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து வருகின்றது. குறிப்பாக கிராமங்களில் உள்ள அனைத்து மூலை முடுக்கிலும் சாலை வசதி கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடனும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கவனமுடன் செயல் பட்டு வருகிறது. நெடுஞ்சாலை துறையின் இந்த நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு இடங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் தற்போது சாலை வசதி கிடைத்துள்ளது.
அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 5 லட்சம் கோடி மதிப்பிலான சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும். ரூபாய் 8000 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று அறிவிக்கிறேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். நல்ல சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசிடம் நிதி பற்றாக்குறை இல்லை. ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இன்று அடைவதற்கு சாலை கட்டமைப்புகள் மிகவும் முக்கியமானது என்று நிதின் கட்கரி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
Input & Image courtesy: Dinamani News