பிறந்த வியட்நாம் குழந்தைக்கு தேவைப்பட்ட அரியவகை OH+ ரத்தம்: உடனே சென்று உதவிய இந்திய இளைஞர்கள்!
வியட்நாமில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு தேவைப்பட்ட அரியவகை OH+ ரத்தம், உடனே சென்று உதவிய 2 இந்திய இளைஞர்கள்.
வியட்நாம் நாட்டின் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் பிறந்து 26 நாட்களை ஆன பச்சிளம் குழந்தைக்கு உடல்நிலை குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வந்து இருக்கிறது. குறிப்பாக திடீரென்று அந்த குழந்தைக்கு உடல்நிலை மோசமாகி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று இருக்கிறது. குழந்தையை காப்பாற்ற அரிய வகை OH பாசிட்டிவ் வகையைச் சேர்ந்த ரத்தம் தேவைப்பட்டது என்று தகவல் வெளியானது. இது தொடர்பாக இந்தியாவில் மும்பை பகுதியைச் சேர்ந்த தன்னார்வால அமைப்பிற்கு தகவல் கிடைத்து இருக்கிறது. உடனே அவர்கள் மூலமாக பெரிலியவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மற்றும் என்ஜினியர் ஒருவர் ஆகிய இருவருக்கும் இந்த வகை ரத்தம் உள்ளவர்கள் என்பது தெரியவந்து இருக்கிறது. இரண்டு பேரும் அடிக்கடி ரத்த தானம் செய்பவர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
அந்த தன்னார்வால அமைப்பின் மூலமாக இரண்டு பேருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உடனே சம்மதம் தெரிவிக்க இந்திய தூதரகம் தன்னார்வல அமைப்பினர் உடனடியாக அந்த இருவர்கள் இருவரையும் வியட்நாம் செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறார்கள். இதனால் ஒரே நாளில் குறிப்பாக 24 மணி நேரத்தில் அந்த ஆசிரியர் மற்றும் என்ஜினியர் இருவரும் வியட்நாம் சென்று இருக்கிறார்கள், அவர்கள் குழந்தைக்கு ரத்த தானம் செய்தார்கள்.
இந்த OH பாசிட்டி வகை ரத்தம் என்பது இந்தியாவைச் சேர்ந்த குறிப்பாக மும்பையை சேர்ந்த டாக்டர் பெண்டட் என்பவரால் கண்டறியப்பட்டு இருக்கிறது. 1982 ஆம் ஆண்டு மும்பையில் இவர் இந்த ஒரு வகை ரத்தத்தை கண்டறிந்து இருக்கிறார். இந்த வகை ரத்தம் 7,500 பேரில் ஒரு ஒருவருக்கு தான் இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
Input & Image courtesy: Thanthi