இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றி: நாசா மற்றும் ஐரோப்பிய நிறுவனம் பாராட்டு!

இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றி அடைந்ததற்கு நாசாவும் ஐரோப்பிய நிறுவனமும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

Update: 2023-07-15 08:45 GMT

இந்தியாவின் சந்திரயான்- 3 திட்டத்தை பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் பாராட்டியுள்ளன . அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வாழ்த்து தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் நிர்வாகயுப் சபை உறுப்பினருமான பில்நெல்சன் கூறுகையில், சந்திரயான்-3 ஏவிய இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் நிலவுக்கு பாதுகாப்பாக பயணம் செய்ய வாழ்த்துகிறேன்.

நாசாவின் லேசர் ரெட்ரோரெப்ளக்டர் வரிசை உட்பட, இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் அறிவியல் முடிவுகளை நாங்கள் எதிர் நோக்குகிறோம். நிலவாய்வு திட்டத்தில் இந்தியா தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகிறது என்றார். இதைப்போல ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தனது டுவிட்டர் தளத்தில் 'மிகப்பெரிய ஏவுதல் பணிகளுக்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டு இருந்தது.

SOURCE: DAILY THANTHI

Similar News