இந்தியாவில் ஒரு லட்சத்தை கடந்த கொரோனா தொற்று!
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்புக்கு பின்னர் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கடந்த 5 நாட்களாக தினந்தோறும் பாதிப்பு ஆயிரக்கணக்கை தாண்டி வருகிறது.
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்புக்கு பின்னர் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கடந்த 5 நாட்களாக தினந்தோறும் பாதிப்பு ஆயிரக்கணக்கை தாண்டி வருகிறது.
நேற்று முன்தினம் 58 ஆயிரத்து 97 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று 91 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று எண்ணிக்கை 3,52,26,386 ஆக உயர்ந்துள்ளது. அதே போன்று ஒரே நாளில் 302 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,83,178 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,836 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
Source, Image Courtesy: Daily Thanthi