இந்தியாவின் அடுத்த கட்ட அதிரடி : கனடா நாட்டினருக்கு விசா வழங்குவது நிறுத்தம்!

கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளது.

Update: 2023-09-22 14:00 GMT

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா கனடா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது.


அதற்கு பதிலடியாக இந்தியாவும் கனடா தூதராக உயர் அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற்றியது .இதன் காரணமாக இரு நாடுகளின் தூதராக உறவில் விரிசல் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது .இதன் எதிரொலியாக கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


இந்த நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கையாக கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி உள்ளது . விசா வழங்குவதற்காக நியமிக்கப்பட்டு உள்ள தனியார் நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு செயல்பாட்டு காரணங்களுக்காக செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்திய விசா சேவை நிறுத்தப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Similar News