பணவீக்க சிக்கலை உடைத்தெறிந்த இந்திய சேவைத்துறை - கடந்த 10.5 ஆண்டுகளில் இல்லாத சாதனை பதிவானது!

India's service sector expanded at fastest pace in a decade in October

Update: 2021-11-08 01:00 GMT

IHS Markit India என்ற பகுப்பாய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, பொருளாதார வளர்ச்சி மற்றும் நுகர்வோர் தேவை அதிகரிப்பு காரணமாக அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் சேவைத் துறை செயல்பாடு கடந்த 10ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அபார வளர்ச்சி கண்டுள்ளது.

இந்திய வர்த்தக சேவைகள் செயல்பாடு அட்டவணை கடந்த மூன்று மாதங்களாக ஏறுமுகத்தில் இருப்பதோடு, அக்டோபர் மாதம் 58.4 ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதம் இது 55.2 ஆக இருந்த நிலையில், 10 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியாக அமைந்துள்ளது.

இதனை IHS Markit இன் பொருளாதார இணை இயக்குனர் Pollyanna De Lima உறுதிபடுத்தியுள்ளார். பணவீக்கத்தின் அதிகரிப்பு, தற்போது சேவைத் துறைக்கு சவாலாக உள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.  IHS Markit ஆல் ஆய்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் சில்லறை விற்பனை மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவற்றில் செலவினங்களை மேற்கோள் காட்டின.

தற்போதைய வளர்ச்சி சாதனை அளவை எட்டியுள்ள போதிலும் தொடர்ச்சியான பணவீக்க அழுத்தங்கள் வரும் ஆண்டில் சேவை துறை வளர்ச்சியைத் தடுக்கலாம் என்று சேவை வழங்குநர்கள் கவலைப்படுகிறார்கள்.

இருந்தாலும், சேவைத் துறை நிறுவனங்கள் அக்டோபரில் அதிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தொடர்ந்தன. வேலை உருவாக்கத்தின் வேகம் செப்டம்பரில் இருந்து அதிகரித்துள்ளது. பிப்ரவரி 2020 முதல் மிக அதிகமாக உள்ளது.




Tags:    

Similar News