கடந்த ஆறு வருடங்களில் இந்தியாவின் சூரிய சக்தி திறன் 13 மடங்கு உயர்ந்துள்ளது.!

கடந்த ஆறு வருடங்களில் இந்தியாவின் சூரிய சக்தி திறன் 13 மடங்கு உயர்ந்துள்ளது.!

Update: 2021-02-20 10:29 GMT

பிரதமரின் சோலார் பம்பு மானிய திட்டத்தின் கீழ், 20 லட்சத்துக்கும் அதிகமான சூரிய சக்தி பம்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆறு வருடங்களில் இந்தியாவின் சூரிய சக்தி திறன் 13 மடங்கு உயர்ந்துள்ளது. சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் மூலம் உலகத்தை இந்தியா ஒன்றிணைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இரண்டாயிரம் மெகாவாட் திறனுள்ள நவீன புகலூர்-திருச்சூர் உயர் மின்னழுத்த நேரடி மின்சார அமைப்பு தொடங்கப்பட்டது. தேசிய தொகுப்புடன் இணைந்த கேரளாவின் முதல் உயர் மின்னழுத்த நேரடி மின்சார அமைப்பு இதுவாகும்.

கேரளாவின் முக்கிய கலாச்சார மையமாக திருச்சூர் திகழ்கிறது. தற்போது மின்சார மையமாகவும் திகழும். மாநிலத்தின் வளர்ந்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவைப்படும் மின்சக்தியை இந்த அமைப்பு வழங்கும். வி.எஸ்.சி மின்மாற்று தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதும் இது தான் நாட்டிலேயே முதல் முறையாகும்.

மாநிலத்துக்குள்ளேயே மின்சார உற்பத்தி செய்யும் ஆதாரங்கள், பருவநிலைகளை சார்ந்தே கேரளாவில் உள்ளதால், தேசிய தொகுப்பை நம்பியே பெரும்பாலும் இம்மாநிலம் உள்ளது. இந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டும். நாம் இதை சாதிக்க உயர் மின்னழுத்த நேரடி மின்சார அமைப்பு உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் மின்சாரம் வழங்குவதற்கு மாநிலத்துக்குள்ளான விநியோக வசதிகளை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். இதில் பயன்படுத்தப்பட்ட உயர் மின்னழுத்த நேரடி மின்சார அமைப்பு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாகும். தற்சார்பு இந்தியா இயக்கத்தை இது வலுப்படுத்துகிறது.

இதனுடன் 50 மெகாவாட் திறனுள்ள மற்றுமொரு தூய்மை மின்சார திட்டமான காசர்கோடு சூரிய சக்தி திட்டம் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது. பசுமையான மற்றும் தூய்மையான மின்சாரத்தை அடைவதை நோக்கிய நடவடிக்கை இதுவாகும். சூரிய சக்திக்கு அதிக முக்கியத்துவத்தை இந்தியா வழங்குகிறது.

Similar News