'இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி திறன்தான் உலகின் மிகச் சிறந்த சொத்து' - ஐ.நா பாராட்டு!
'இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி திறன்தான் உலகின் மிகச் சிறந்த சொத்து' - ஐ.நா பாராட்டு!
"இந்தியாவின் உற்பத்தித் திறன் இன்று உலகில் உள்ள மிகச் சிறந்த சொத்து என்று நான் நினைக்கிறேன். அது முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை உலகம் புரிந்துகொள்வதாக நான் நம்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார். 55 லட்சம் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அண்டை நாடுகளுக்கு இந்தியா பரிசளித்துள்ள நிலையில், ஐ.நா பொதுச் செயலாளரின் அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே வாராந்திர மாநாட்டில் உரையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா நேற்று, ஓமான், கேரிகாம் நாடுகள், நிகரகுவா, பசிபிக் தீவு நாடுகளுக்கு தடுப்பூசி மருந்துகளை பரிசளிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்றார். தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணியான கவி அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் ஆப்பிரிக்காவிற்கு 1 கோடி டோஸ் தடுப்பூசியையும், ஐக்கிய நாடுகளின் சுகாதார ஊழியர்களுக்கு 10 லட்சத்தையும் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீவாஸ்தவா மேலும் தெரிவித்தார்.