இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் ஏற்படும் அபாயம்: பகிர் கிளப்பும் புலனாய்வு அமைப்பின் தகவல்?
இந்திய மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு தற்போது தகவல் பகிர்ந்து இருக்கிறது.
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனராக அலுவலகம் சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் போக்கை பாகிஸ்தான் நீண்ட காலமாக கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானின் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை இந்தியா ஒரு பொழுதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மீது தொடரும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா ராணுவ பலத்துடன் நிச்சயமாக பதிலடி கொடுக்கும் சாத்தியம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
மேலும் காஷ்மீரில் வன்முறை, அமைதியின்மை இந்தியா மீது நடக்கப்படும் பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றின் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் அந்த அறிக்கையை தன்னுடைய முடிவை சமர்ப்பித்து இருக்கிறது. கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் படைகளை குவித்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு இந்திய வீரர்கள் மீது சீனா தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்திய சீன எல்லை விவகாரம் அதிகரித்து காணப்படுகிறது.
இருநாடுகளுக்கும் பேச்சு வார்த்தை வழியாக எல்லை விவகாரத்தில் தீர்வு தற்பொழுது கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது. அனுசக்தி நாடுகளான இந்தியாவும் சீனாவும் சர்ச்சைக்குரிய படைகளை குவித்து வருவதன் காரணமாக ஆபத்து அதிகரித்து இருக்கிறது. அதனால் ஒரு பக்கம் சீனாவும் மறுபக்கம் பாகிஸ்தானும் தொடர்ந்து இந்தியாவிற்கு தொல்லை தரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை செய்து வந்தால் நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Maalaimalar News