பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய நபர் எல்லை பாதுகாப்புப் படையால் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய நபர் எல்லை பாதுகாப்புப் படையால் சுட்டுக்கொலை!

Update: 2021-02-08 18:15 GMT

இந்தியப் பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து இந்திய எல்லையில் ஊடுருவப் பாகிஸ்தானில் இருந்து முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் இந்திய இராணுவம் அவர்களின் முயற்சியை முறியடித்து வருகின்றது. இன்று திங்கட்கிழமை ஜம்மு வில் சம்பா பகுதியில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவிய நபரை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். 

இந்த சம்பவமானது சம்பா பகுதியில் சக் பாகுவிரா பகுதியில் காலை  9.45 மணியளவில் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "பலமுறை எச்சரிக்கை விடுத்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் ஜம்மு வில் சம்பா பகுதியில் பிப்ரவரி 8 இல் 9.45 மணியளவில் எல்லையில் போடப்பட்டுள்ள வேலியைப் பாகிஸ்தானில் இருந்து வந்த நபர் தாண்டி செல்ல முயன்றார். அவரை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்," என்று எல்லை பாதுகாப்புப் படையினரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். 

"பல தடவை எச்சரிக்கை விடப் பட்டாலும் இதுபோன்ற வேலியைத் தாண்டி வர முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றது. பாதுகாப்புப் படையினரும் அவர்களைச் சுடுகின்றனர். தற்போது பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது," என்று செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். 

மேலும் மீட்கப்பட்ட சடலமானது இந்தியச் சர்வதேச எல்லையில் 40 மீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Similar News