மம்தாவை எதிர்ப்பதற்கு பா.ஜ., முதல்வர் வேட்பாளரா கங்குலி? ஆளுநரை சந்தித்த பின்னணி ரகசியம் என்ன?

மம்தாவை எதிர்ப்பதற்கு பா.ஜ., முதல்வர் வேட்பாளரா கங்குலி? ஆளுநரை சந்தித்த பின்னணி ரகசியம் என்ன?

Update: 2020-12-28 09:17 GMT

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி மேற்கு வங்காள ஆளுநர் ஜக்தீப் தன்கரை சந்தித்து பேசிய சம்பவம் தற்போது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் சந்திப்பு நீடித்த நிலையில் இது மரியாதை நிமித்தமானது என்றும் இதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பழமையான கிரிக்கெட் மைதானமான ஈடன் கார்டனுக்கு வருமாறு கங்குலி தன்னை அழைத்ததாகவும் அதை தான் ஏற்றுக்கொண்டதாகவும் ஆளுநர் ஜக்தீப் தன்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக கங்குலி அரசியலில் குதிக்க உள்ளதாகவும் அதுவம் பாஜகவில் விரைவில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தது.

மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கங்குலியை பாஜக தரப்பு முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றது.
 

Similar News