அறுவை சிகிச்சையின் தந்தை அரபு நாட்டவரா? பாடப்புத்தகத்தில் கோல்மால் செய்யும் கேரளா!

அறுவை சிகிச்சையின் தந்தை அரபு நாட்டவரா? பாடப்புத்தகத்தில் கோல்மால் செய்யும் கேரளா!

Update: 2021-01-17 07:30 GMT

சமீபத்தில் ஷாஜகான் மற்றும் ஔரங்கசீப் காலத்தில் போர்களின் போது சேதமடைந்த கோவில்களை சீரமைக்க உதவித் தொகை வழங்கப்பட்டதாக NCERT புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

அது குறித்து கேள்வி எழுப்பி தன்னார்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரி இருந்தார். ஆனால் போரில் இடிக்கப்பட்ட கோவில்களை மீண்டும் கட்ட முகலாய அரசர்கள் உதவித்தொகை வழங்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று NCERT ஒப்புக் கொண்டது.

இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது கேரளாவில் 9ஆய் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் அறுவைசிகிச்சை முறையைக் கண்டறிந்தவர் குறித்து தவறான தகவல் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. அதில் அறுவைசிகிச்சையின் தந்தை என அபு அல்-காசிம் அல்-ஜவாரி என்பவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அல்-ஜவாரி 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அராபிய மருத்துவர் என்று கருதப்படுகிறது. அவரது காலத்தில் சில அறுவைசிகிச்சை உபகரணங்களை வரைந்து வைத்ததாகவும் அவற்றைக் கொண்டு சிறு சிறு அறுவைசிகிச்சைகளில் ஈடுபட்டதாகவும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பழங்கால இந்திய மருத்துவர் சுஷ்ருதர் தான் அறுவைசிகிச்சை முறையின் தந்தை என்பது அனைவரும் அறிந்ததே. இவர் அல்-ஜவாரிக்கும் முன்னர், அதாவது 8வது நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கருதப்படுகிறது. காசி ராஜ்ஜியத்தில் வாழ்ந்த சுஷ்ருதர் தனது 'சுஷ்ருத சம்ஹிதா' என்ற நூலில் தான் மேற்கொண்ட பல அறுவைசிகிச்சைகள் குறித்து விளக்கமாக எழுதியுள்ளார்.

 

அறுவைசிகிச்சையின் தந்தை என்பதோடு சுஷ்ருதர், இந்திய மருத்துவத்தின் தந்தை என்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் தந்தை என்றும் அறியப்படுகிறார். அவர் எழுதிய சுஷ்ருத சம்ஹிதையில் 1,120 நோய்கள், 700 மருத்துவ குணமுள்ள தாவரங்கள், தாதுக்களைப் பயன்படுத்தி தயாரிக்கும் 64 மருந்துகளுக்கான குறிப்புகள், விலங்குகளில் இருந்து கிடைக்கும் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் 57 மருந்துகளுக்கான குறிப்புகள் உள்ளிட்டவை 184 பகுதிகளில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

தற்போதைய அறுவைசிகிச்சையில் மேற்கொள்ளப்படும் அனைத்து அடிப்படை முறைகளும், சில மேம்பட்ட முறைகளும் கூட இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. குழந்தை பிறப்பின் போது செய்யப்படும் அறுவை சிகிச்சை, பல் சிகிச்சை உட்பட தற்கால முறைகள் பலவும் இந்த புத்தகத்தில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

 

எலும்பு முறிவு, அவற்றின் வகைகள், சிகிச்சை முறைகள் என்று பல மருத்துவ சிகிச்சை முறைகள் பற்றி தனது புத்தகத்தில் சுஷ்ருதர் எழுதியுள்ளார். இவ்வாறு இருக்கும் போது அனைவரும் ஒப்புக் கொண்ட ஒரு உண்மைக்கு மாறாக அரபு நாட்டவர் ஒருவர் தான் அறுவைசிகிச்சையின் தந்தை என்று கேரள பள்ளிப் பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட்டுகளின் வரலாற்றை மாற்றும் முயற்சி என்று சர்ச்சை எழுந்துள்ளது.

Similar News