மும்பை பயங்கரவாத தாக்குதல் அதிக விலை கொடுத்த இந்தியா - ஐ.நா சபை கூட்டம்!

மும்பை பயங்கரவாத தாக்குதலில் இந்தியா அதிக விலை கொடுத்துள்ளதாக ஐ.நா சபை கூட்டத்தில் இந்தியா வேதனை.

Update: 2022-10-30 07:31 GMT

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத எதிர்ப்பு முதல் நாள் கூட்டம் நேற்று மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. புதிய தொழில்நுட்பங்கள் பயங்கரவாத செயல்களுக்காக பயன்படுத்தி வருவதை தடுத்தல் என்பது பற்றி நடந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில், மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூலையாக இருந்தவர்கள் சதி திட்டம் தீட்டியவர்கள் தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தண்டிக்கப்படவில்லை.


இது ஒட்டுமொத்த நம்பகத்தன்மை ஆர்வத்தை குறைக்கிறது. அந்த தருணத்தில் ஒட்டுமொத்த மும்பை நகரமே எல்லை தாண்டிய பயங்கரவாதிகளில் பிடித்து வைக்கப்படுகிறது. சுமார் 140 இந்தியர்கள், 26 வெளிநாட்டினர் என இந்த தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த பயங்கரவாத தாக்குதலில் மும்பை மட்டுமல்ல. அது ஒட்டுமொத்த உலகத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயங்கரவாதம் உலகின் பல பகுதிகளில் பாதித்திருக்கலாம். ஆனால் இந்தியா அதன் விலையை மற்றவர்களை விட அதிகமாக கொடுத்துள்ளது.


சில பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யும் பொழுது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் வருந்தத்தக்க வகையில் அரசியல் காரணங்களால் சில சமயங்கள் செயல்படுவதில்லை. பயங்கரவாதத்தை வேரறுக்க நம் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் உயர வேண்டும் பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியாக செயல்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் அவர் பேசியிருக்கிறார்.

Input & Image courtesy: Dinamani News

Tags:    

Similar News