ஜம்மு &காஷ்மீர்: 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய 4G இணையச் சேவை.!

ஜம்மு &காஷ்மீர்: 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய 4G இணையச் சேவை.!

Update: 2021-02-06 15:06 GMT

ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் வெள்ளிக்கிழமையில் இருந்து 4G இணையச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்று ஜம்மு&காஷ்மீர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 18 மாதங்களாக   அங்கு இணையச் சேவை முடக்கிவைக்க பட்டிருந்தது குறிப்பிட தக்கத்து. 

"4G இணையச் சேவை ஜம்மு&காஷ்மீர் முழுவதும் மீண்டும் தொடங்கப்படுகின்றது," அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் ரோஹித் கன்சல் டிவிட்டரில் தெரிவித்தார். 4G இணையச் சேவை இரண்டு இடங்களில் மட்டுமே இருந்தது. ஜம்மு வில் உதம்பூர் பகுதியிலும் மற்றும் காஷ்மீரில் கந்தர்பால் பகுதியில் கிடைத்தது. யூனியன் பிரதேசங்களில் மற்ற 18 மாவட்டங்களிலும் 2G இணையச் சேவையே வழங்கப்பட்டது. 

ஜம்மு&காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு சட்டம் 370 திரும்பப்பெற்று மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பின்னர் அங்கு மொபைல் தொலைப்பேசி சேவையும் மற்றும் இணையச் சேவையும் 2019 ஆகஸ்ட் 2020 இல்  துண்டிக்கப்பட்டது. 

மேலும் அங்குத் தடைசெய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பின்னர் தொலைப்பேசி சேவை திரும்பப் பெற்றாலும், எல்லையில் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கக் கூடும் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையின் படி இணையச் சேவை நிறுத்திவைக்கப் பட்டிருந்தது. அங்கு வணிகம், மாணவர்கள் மற்றும் தொழில் துறைக்கு இணையச்  சேவை அதிகம் தேவைப்படுவதால் 4G இணைய சேவை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. 

"லெப்ட்டினன்ட் கவர்னர் உடன் இன்று நடந்த கூட்டத்தில், உள்ளூர் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கோரிக்கையின் படி 4G இணையச் சேவை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படுகிறது," என்று அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார். 

Similar News