ஜம்மு&காஷ்மீர்: DDC வேட்பாளர் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூட்டு.!

ஜம்மு&காஷ்மீர்: DDC வேட்பாளர் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூட்டு.!

Update: 2020-12-04 17:25 GMT

ஜம்மு & காஷ்மீரில் நடந்து வரும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சிலருக்கான(DDC)  தேர்தலில் வெள்ளிக்கிழமை தெற்கு காஷ்மீரில் கோக்கர்நாக் பகுதியில் நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின் போது, DDC வேட்பாளர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளார். 

கடந்த மாதம் முதல் துவங்கிய தேர்தலில் DDC வேட்பாளர் மீது நடைபெற்ற முதல்  தாக்குதல் இது ஆகும். சுடப்பட்ட வேட்பாளர் அனீஸ் உல் இஸ்லாம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கோக்கர்நாக்கில் சாகம் பகுதியில் வைத்து அவர் சுடப்பட்டுள்ளார். மேலும் இவர் சமீபத்திலேயே அல்தாப் புகாரி தலைமையில் அபினி கட்சியில் இணைந்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறை மற்றும் இராணுவம் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஜம்மு & காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும் மற்றும் தேசிய மாநாட்டின்(NC) துணைத் தலைவருமான உமர் அப்துல்லா,  இந்த தாக்குதலானது அமைதியைக் குலைக்க விரும்பும் படைகளால் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். "DDC வேட்பாளர் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து தகவல் கிடைத்தது. அவர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். காஷ்மீரின் அமைதிக்கு விரோதமாகச் செயல்படும் அந்த படைகள் எப்பொழுதும் தேர்தலை மோசமடைய செய்கின்றனர்," என்று உமர் அப்துல்லா டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, எட்டு கட்டங்களில் 280 வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் DDC தேர்தல் நடைபெறும் இடங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Similar News