ஜம்மு & காஷ்மீர்: தொடரும் அதிவேக இணையச் சேவைக்கான தடை!

ஜம்மு & காஷ்மீர்: தொடரும் அதிவேக இணையச் சேவைக்கான தடை!

Update: 2020-12-26 12:03 GMT

ஜம்மு & காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு பின்பும் முதன்முறையாக மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்(DDC) தேர்தல் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அங்கு அதிவேக இணையச் சேவைக்குத் தொடர்ந்து அங்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளிக்கிழமை ஜம்மு & காஷ்மீர் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஜம்மு & காஷ்மீரில் அதிவேக இணையச் சேவையைத் தொடங்குவதற்கான தடைக்கு DDC தேர்தல் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

பொது மக்களின் அமைதிக்கு விரோதமாக பெரிய அளவிலான வாக்குப்பதிவுக்குக் கட்சிகளின் பங்கேற்பு குறைவாகவே இருந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உதம்பூர் மற்றும் காண்டர்பால் மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கு ஜனவரி 8 வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் அந்த அறிக்கையில், அங்கு அதிகப்படியான தீவிரவாத நடவடிக்கையில் இருப்பதால் தடை நீடிக்கப்படுகின்றது. மேலும் இது, "தேர்தல் முடிவடைந்ததில் இருந்து பொது மக்கள், காவல் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் இராணுவ வீரர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருவதன் மூலம் உறுதியளிக்கின்றது," என்று கூறப்பட்டிருந்தது. 

ஜம்மு & காஷ்மீரில் சட்டம் 370 திருப்பிப்பெற்று அங்குச் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5 இல் அதிவேக இணையச் சேவைக்குத் தடை விதிக்கப்பட்டது. மற்றும் ஜனவரி 25 இல் குறைந்த மற்றும் 2G இணையச் சேவை கொண்டுவரப்பட்டது. ஆகஸ்ட் 16 உதம்பூர் மற்றும் காண்டர்பால் போன்ற இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் 4G இணையச் சேவைக்கு அனுமதியளிக்கப்பட்டது. 

Similar News