காஷ்மீரில் மீண்டும் இந்துக்கள் வெளியேற்றம்? பயங்கரவாதிகள் இந்துக்களை குறி வைக்க சதி!
காஷ்மீரில் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதால், சிறுபான்மை அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக காஷ்மீரை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இந்து வங்கி மேலாளரை இஸ்லாமிய பயங்கரவாதிகள் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அறிக்கைகளின்படி , 4,000 க்கும் மேற்பட்ட பண்டிட் ஊழியர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேற தங்கள் விருப்பத்தை தெளிவுபடுத்தியுள்ளனர். அங்குள்ள முகாம்களில் இருந்து பெருமளவில் இடம்பெயர்வதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர். அச்சமடைந்த இந்துக்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறத் தயாராகி வருவதைக் காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் ஒருங்கிணைப்பாளர் அமித் ரெய்னா கூறுகையில், பாதுகாப்புப் பணியாளர்களால் பாதுகாக்கப்பட்ட பல்வேறு முகாம்களில் வசிக்கும் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு ஜம்மு செல்ல முடிவு செய்துள்ளனர்.
காஷ்மீரி இந்துக்களின் அமைப்பான காஷ்மீரி சிறுபான்மை மன்றம் வெள்ளிக்கிழமை காலைக்குள் பள்ளத்தாக்கில் உள்ள சிறுபான்மையினரை இடம்பெயரச் சொல்லி அறிக்கைகளை வெளியிட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.