ஜம்மு & காஷ்மீர்: பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களை இந்தியாவுக்குக் கடத்த முயற்சி!

ஜம்மு & காஷ்மீர்: பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களை இந்தியாவுக்குக் கடத்த முயற்சி!

Update: 2021-01-19 07:15 GMT
ஜம்மு&காஷ்மீர் காவல்துறை இந்தியா பாகிஸ்தான் எல்லையில் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளைக் கடந்த முயன்ற இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையானது ஞாயிற்றுக்கிழமை அன்று ஜம்மு & காஷ்மீரில் சம்பா மாவட்டத்தில் விஜய்ப்பூர் பகுதியில் நடந்துள்ளது.
 
இந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பக்கத்து எல்லையில் இருந்து ட்ரோன்கள் மூலம் கொண்டுவரப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களாகவே இதுபோன்று பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் மூலம் கொண்டுவரப்படுகின்ற ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள், போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆயுதங்களைக் கொண்டு சென்றிருப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
காவல்துறையின் அறிக்கையின் படி, 2 AK-74 துப்பாக்கிகள், பிஸ்டல் தோட்டாக்களைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஆயுதங்களை கையகப்படுத்தும் போது கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப் படுகின்றது. முதற்கட்ட விசாரணையில் உமர் அஹ்மத் மாலிக் மற்றும் சுஹைல் அஹ்மத் மாலிக் ஆகியோர் பயங்கரவாத செயல்திட்டங்களுக்குச் சதி செய்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 
கடந்த ஆண்டில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் மூன்று சுரங்கப் பாதைகளைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். கடந்த ஆண்டு அக்டோபரில் இந்திய எல்லைக்கோடு வழியாக நுழைய முயன்ற பாகிஸ்தான் இராணுவ வீரரை இந்திய இராணுவம் சுட்டுக்கொன்றது. 

Similar News