ஜம்மு & காஷ்மீர்: முதல் பெண் பேருந்து ஓட்டுநரான பூஜா!

ஜம்மு & காஷ்மீர்: முதல் பெண் பேருந்து ஓட்டுநரான பூஜா!

Update: 2020-12-25 09:39 GMT
பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர். அவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களை முன்வைத்துச் சாதித்தும் வருகின்றனர். இந்தியா மற்றும் பிற  நாடுகளில் பெண்கள் விமானம், பேருந்து, ஆட்டோ போன்ற போக்குவரத்துக்கு துறையிலும் தங்கள் சாதனைகளைப் புரிகின்றனர். அதே போன்று வியாழக்கிழமை ஜம்மு & காஷ்மீரில் தனியார் பேருந்தை ஒட்டி ஜம்மு & காஷ்மீரில் பூஜா தேவி முதல் பெண் ஓட்டுநராக மாறியுள்ளார். இவர் இரண்டு குழந்தைக்குத் தாய் என்பதும் குறிப்பிட தக்கத்து. 

பூஜா கத்துவா மாவட்டத்தில் சந்தர்-பசோஹ்லி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 30 ஆகும். இவருக்குச் சிறு வயதில் இருந்தே வாகனம் ஓட்டுவதில் ஈடுபாடு கொண்டிருந்துள்ளார். அதனால் தன் இளம் வயதில் கார் ஓடிவந்துள்ளார் ஆனால் இவருக்குப் பெரிய வாகனங்கள் ஓட்டுவதைக் கனவாகக் கொண்டுள்ளார். 

இது குறித்து பூஜாவிடம் பேசிய பொழுது, "முதலில் என் குடும்பமும் எனக்கு ஆதரவு வழங்கவில்லை. ஆனால் பிற வேலைகளைப் புரிவதற்கு நான் அவ்வளவு படிக்கவில்லை. முதலில் டாக்ஸி ஓட்ட கற்றுக்கொண்டு ஓட்டி வந்தேன். ஜம்மு வில் லாரியும் ஓடினேன். தற்போது இறுதியாக என் கனவு நிறைவடைந்துள்ளது," என்று தன் மகிழ்ச்சியின் வெளிப்பாட்டை பூஜா தெரிவித்தார். இவரது மகள் தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள் மற்றும் மகன் குழந்தைப் பருவத்தில் உள்ளான். 

மேலும், "பெண்கள் தற்போது போர் விமானங்களை ஓட்டி வருகின்றனர். நான் ஆண்கள் மட்டுமே பயணிகளுக்கான பேருந்தை ஓட்ட முடியும் என்ற கருத்தை முறியடிக்க விரும்பினேன். நான் இதை தங்கள் கனவுகளை நிறைவேற்றப் போராடி மற்றும் பெற்றோர்களின் விருப்பம் இல்லாத பெண்களுக்கு ஒரு செய்தியாகத்  தெரியப்படுத்த விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். 

தன் திறன் மேல் நம்பிக்கை வைத்து இந்த ஓட்டுநர் வேலையை வழங்கிய நபர்களுக்கு நன்றியை பூஜா தெரிவித்தார். "ஜம்மு & காஷ்மீரின் பதன்கோட் நெடுஞ்சாலை மிகுந்த போக்குவரத்துக்கு நெரிசல் கொண்டதாகும். ஆனால் இது என்னுடைய கனவாகும். முதல் பயணமே மிகுந்த நம்பிக்கையை எனக்கு அளித்துள்ளது," என்று பூஜா கூறினார். 

மேலும், இவர் தன் வேலைக்குப் பின்னால் வரும் விமர்சனங்களைத் தவிர்த்து தன்னுடன் வேலையில் உள்ள சக ஆண் ஓட்டுநர்கள் தன்னை வரவேற்றது மற்றும் உதவிக்கரமாக இருப்பது குறித்தும் வலியுறுத்தினார். "ஒரு பெண் ஓட்டுநராக பணிபுரியும் போது அதற்குப் பின்னால் வரும் மக்களின் விமர்சனத்தை நான் நன்கு அறிவேன். நான் வாகனத்தை ஓட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தி வரும் விமர்சனங்களைக் கண்டுகொள்ளப் போவதில்லை," என்று பூஜா கூறினார். 

Similar News