ஜம்மு & காஷ்மீர்: 2020 இல் 63.93 சதவீதமாகக் குறைந்துள்ள பயங்கரவாத சம்பவங்கள்!

ஜம்மு & காஷ்மீர்: 2020 இல் 63.93 சதவீதமாகக் குறைந்துள்ள பயங்கரவாத சம்பவங்கள்!

Update: 2021-01-11 17:27 GMT

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் 2020 காலகட்டத்தில் ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் 2019 யை ஒப்பிடும் போது ஜம்மு&காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் 2020இல் 63.93 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

மேலும் உள்துறை அமைச்சகம், சிறப்பு பாதுகாப்புப் படையினர் இறப்பு எண்ணிக்கை 29.11 ஆகக் குறைந்துள்ளது மற்றும் 2019 யை ஒப்பிடும் போது 2020 இல் பொது மக்கள் இறப்பு எண்ணிக்கை 14.28 ஆகக் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டின் சாதனைகள் குறித்துப் பேசிய உள்துறை அமைச்சகம், யூனியன் பிரதேசங்களான ஜம்மு&காஷ்மீர் மற்றும் லடாக்கில் மத்திய மற்றும் மாநில சட்டங்களைத் தழுவியது முக்கிய சாதனை என்று அது குறிப்பிட்டது. 

"யூனியன் பிரதேசங்களான ஜம்மு&காஷ்மீரில் 48 மத்திய மற்றும் 167 மாநில சட்டங்களை மாற்றியமைப்பது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் லடாக்கில் 44 மத்திய மற்றும் மாநில சட்டங்களை மாற்றியமைப்பது குறித்தும் அறிக்கை வெளியிடப்பட்டது," என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியது.

மேலும் 2020 ஜனவரி 31 இல் ஜம்மு&காஷ்மீரின் மறு சீரமைப்புக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் சட்டம் 75 கீழ் இருக்கும் சிக்கலையும் அது நீக்கியது என்றும் தெரிவித்துள்ளது. 

மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான ஜம்மு&காஷ்மீரில் புலம்பெயர்ந்து குடியேறிய 36,384 குடும்பங்களுக்குப் பிரதமர் நிதியுதவி திட்டத்தின் கீழ் 5.5லட்சம் வழங்கியுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2019 இல் மத்திய அரசு ஜம்மு&காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து சட்டம் 370 யை திரும்பப்பெற்றது. மேலும் அது ஜம்மு&காஷ்மீரை யூனியன் பிரதேசங்களைப்  பிரித்து ஜம்மு&காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. 

Similar News