ஜம்மு & காஷ்மீர்: இரண்டு TRF பயங்கரவாதிகள் கைது - ஆயுதங்கள் பறிமுதல்!

ஜம்மு & காஷ்மீர்: இரண்டு TRF பயங்கரவாதிகள் கைது - ஆயுதங்கள் பறிமுதல்!

Update: 2020-12-26 12:01 GMT

வெள்ளிக்கிழமை அன்று மலை 'தி ரெசிஸ்டன்ஸ் போர்ஸ்(TRF)  யை சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளைக் கைது செய்யப்பட்டதாக காவலதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் காசிகுண்ட் சூரத் பகுதியைச் சேர்ந்த ரெய்ஸ் அஹமத் தார் மற்றும் குல்கம் அஷ்முஜி பகுதியைச் சேர்ந்த சூபிசர் அஹ்மத் ஷேக் என்று தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை மாலை நர்வால் வழியாக ஸ்ரீநகருக்கு காரில் சென்று கொண்டிருந்த போது உள்ளூர் காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால்(SOG) கைது செய்யப்பட்டனர். 

அந்த பகுதியில் தானியங்கி ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளது என்று தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து SOG குழு அமைக்கப்பட்டதாக காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். "வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் SOG வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இவர்கள் வந்த கார் சோதனையில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளது. பின்னர் SOG குழு அந்த வாகனத்தை வாகனத்தைப் பின்தொடர்ந்து இருவரையும் அவர்கள் வைத்திருந்த பையுடன் கைது செய்தது," என்று அவர் தெரிவித்தார். 

தார் வைத்திருந்த பையில், 60 சுற்றுகள் கொண்ட இரண்டு தோட்டாக்கள் உள்ள AK துப்பாக்கிகள் மற்றும் கை துப்பாக்கிகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது நடவடிக்கைக்குப் பிறகு TRF திட்டம் முறியடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் இவர்கள் இருவரது மீதும் இந்தியத் தண்டனை சட்டம், ஆயுத சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் போன்ற பல வற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். TRF லஷ்கர்-இ-தைபா குழுவின் ஒன்றாகும். 

"பயங்கரவாத நடவடிக்கைகள் பலவற்றில் தார் ஈடுபட்டுள்ளார். இவருக்கு எதிராக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் அவர் TRF யில் வேலை செய்வது தெரிவியாவந்துள்ளது. அவருடன் இருந்த கூட்டாளி குறித்தும் கண்டறியப்பட்டு வருகின்றது," என்று அதிகாரி தெரிவித்தார். மேலும் பயங்கரவாத தாக்குதலுக்கு உதவும் அமைப்புகள் குறித்துக் கண்டறிய இந்த வழக்கை காவல்துறை விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News