தேசிய கீதம் ஒலித்த தினம் இன்று - முதன்முறையாக பாடப்பட்ட ஜன கண மன!

தேசிய கீதம் ஒலித்த தினம் இன்று - முதன்முறையாக பாடப்பட்ட ஜன கண மன!

Update: 2020-12-27 17:22 GMT

இந்திய தேசிய கீதமான ஜன கண மன பாடல் இதே நாளில் முதன்முறையாக பாடப்பட்டது. இந்திய நாட்டின் தேசிய கீதமாக உள்ளது ஜன கண மன பாடல். இந்த பாடலை கவிஞர் ரவீந்தரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதினார்.

52 நொடிகளில் இந்த பாடலை பாடி முடிக்கும் வகையில் அவரே இசையமைத்தார். முதன்முறையாக இந்தியாவின் தேசிய கீதம் 1911ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் பங்கேற்கும் ஒவ்வொரு கூட்டத்திலும் ஒலித்தது.

இதையடுத்து இந்த கீதம் நாடு முழுவதும் ஒலிக்க வேண்டும் என்றும், தேசிய கீதமாக அறிவிக்க வேண்டும் என நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கூறினார்.
1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு ஜன கண மன பாடலை தேசிய கீதமாக ஏற்றுக்கொண்டது. அன்று முதல் அனைத்து அரசு விழாக்களில் நிறைவில் ஜன கண மன ஒலிக்கிறது.

இந்தியாவின் அனைத்து விதமான அரசு நிகழ்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெறுகிறது. தேசிய கீதம் பாடும் போது அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் பழக்கம் உள்ளது.

தேசிய கீதம் அங்கீகரிக்கப்பட்ட காலத்தில் அனைத்திந்திய வானொலியில் அன்றாட நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. ஆரம்பக் காலத்தில் திரையரங்குகளிலும் தேசியகீதம் ஒலிக்கப்பட்டது.

அதாவது திரைப்படத்தின் முடிவில் தேசியக் கொடி திரையிலும் ,தேசியகீதம் ஒலியிலும் வந்தன.திரையரங்கில் உள்ள மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்த பின்னரே சென்றனர். தற்காலத்தில் இது நடைமுறையில் இல்லாமல் போய்விட்டது.

Similar News