ஒடிசா கடற்கரையைத் தொடும் ஜாவத் புயல்!

வங்கக் கடலில் உருவான ஜாவத் புயல், இன்று (டிசம்பர் 5) ஒடிசாவின் பூரி கடற்கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-05 03:21 GMT

வங்கக் கடலில் உருவான ஜாவத் புயல், இன்று (டிசம்பர் 5) ஒடிசாவின் பூரி கடற்கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு தீவிர காற்றழுத்தமாக வலுவிழந்த புயல், ஒடிசா கடற்கரை அருகே நகர்ந்து வருவதாகவும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கவுள்ளதால் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு ஆந்திரா, ஒடிசா மற்றும் தெற்கு மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் மக்கள் பெருமூச்சி விட்டுள்ளனர்.

புயல் வலுவிழந்த காரணத்தினால் கடலோர பகுதிகளில் வசித்து வரும் மக்களை வெளியேற்றும் பணியை ஒடிசா அரசு சற்று குறைத்துள்ளது. அரசுக்கும் வேலை பளு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், புயல் முன்னெச்சரிக்கை பணியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News