உதவி செய்வது போல நடித்து 12 பழங்குடியின குழந்தைகள் மதமாற்றம் - சர்ச்சில் இப்படியும் அநியாயம் நடக்குது!

Update: 2022-06-13 11:16 GMT

ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் 12 பழங்குடியின குழந்தைகள் மதமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பியிடம் கேட்டுக் கொண்டுள்ளது. 

என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கனூங்கோ, எஸ்பிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதம் கிடைத்த மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு காவல்துறையைக் கேட்டுக் கொண்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இயங்கும் 'டோர்பா ஆர்சீ சர்ச்' மூலம் ஜார்க்கண்டில் உள்ள குந்தி மாவட்டத்தைச் சேர்ந்த 12 குழந்தைகள் சட்டவிரோதமாக கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டதாக ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட செய்தி அறிக்கையை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 

கிராமத்தில் சில காலமாக இதுபோன்ற சட்டவிரோத மதமாற்றங்கள் நடைபெறுவதும், இன்று வரை எந்த நடவடிக்கையும் உள்ளாட்சி நிர்வாகம் எடுக்கவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய 12 பேரில் 10 பேர் சிறார்களும் மற்ற இருவரும் முறையே 21 மற்றும் 25 வயதுடைய பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமவாசிகளின் கூற்றுப்படி, கல்வி கற்போம் என்ற பெயரில் அவர்கள் தேவாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டனர்.

மாநிலத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் அமலுக்கு வந்தாலும், மாநிலத்தில் நடந்து வரும் சட்டவிரோத மதமாற்றங்களுக்கு எதிராக 'சர்ன தர்ம சோதோ சமிதி' என்ற அமைப்பினர் கிராமத்தில் கூட்டம் நடத்தி வேதனை தெரிவித்தனர்.

ஜார்க்கண்டில் மதமாற்றத் தடைச் சட்டம் இருப்பதால், சட்ட விரோதமாக மதமாற்றங்கள் நடைபெறுகின்றன. 

Input From: Indian Express 

Similar News