JMB பயங்கரவாத அமைப்பின் தலைவருக்கு 29 ஆண்டு சிறைத் தண்டனை!

JMB பயங்கரவாத அமைப்பின் தலைவருக்கு 29 ஆண்டு சிறைத் தண்டனை!

Update: 2021-02-11 12:59 GMT

புதன்கிழமை அன்று கொல்கத்தாவில் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம், பர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான பயங்கரவாத அமைப்பான ஜம்மத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ்(JMB) அமைப்பின் தலைவர் கௌஸர்கு 29 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 50,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. 

பங்களாதேஷை இருப்பிடமாகக் கொண்ட கௌஸர் அக்க போமாவின் மேல் இந்தியத் தண்டனை சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் ஆயுத சட்டம் என பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக NIA தெரிவித்துள்ளது. 
 

கௌஸர் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பான JMB யின் தலைவர் மட்டுமல்லாது மற்றும் 2018 இல் பீகாரில் நடந்த போத் கயா குண்டு வெடிப்பிலும் தொடர்புடைய குற்றவாளி என்றும் NIA தெரிவித்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட வழக்கானது 2014 அக்டோபர் 2 இல் மேற்கு வங்காளத்தில் பர்வான் மாவட்டத்தில் ஒரு வீட்டு மாடியில் நடந்த IED குண்டுவெடிப்பு தொடர்பான வழக்காகும். 
 

முதலில் மேற்கு வங்காள காவல்துறை வழக்குப் பதிவு செய்தது, 2014 அக்டோபர் 10 இல் அந்த வழக்கை NIA ஏற்றுக்கொண்டது. இந்த தடை செய்யப்பட்ட அமைப்பானது தங்கள் உறுப்பினர்களை இந்தியா மாற்றம் பங்காள தேசத்திற்கு எதிராகப் போரை நடத்துவதற்கும், ஆட்சேர்ப்பு நடத்துவது மற்றும் வெடிகுண்டு தயாரிப்பது போன்ற சதித் திட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. 

"இந்த வழக்கின் விசாரணையின் போது பெரியளவிலான IED, வெடி குண்டுகள் கையெறி குண்டுகள், பயிற்சி வீடியோக்கள்," முதலியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் பல்வேறு குற்றங்களைச் செய்ததற்காக 33 பேர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Similar News