குவாட் மாநாடு: இந்திய பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல் !

ஜோபைடன் தலைமையில் குவாட் தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2021-09-14 13:46 GMT

வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி அன்று அமெரிக்க அதிபர் அவர்கள் தலைமையில் குவாட் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உள்பட 4 நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் முதல் உச்சி மாநாடு மார்ச் மாதம் நோய்தொற்று காரணமாக இணையதளம் மூலம் நடைபெற்றது.


இந்நிலையில் குவாட் தலைவர்களின் நேரடி பங்கேற்பில் முதல் உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் வரும் 24ம் தேதி குவாட் தலைவர்களின் மாநாடு நடைபெற உள்ளது. ஜோ பைடன் தலைமையில் வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மோரிஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


குவாட் மாநாட்டில் கொரோனா வைரஸ், பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளதாக எதிர்பார்க்கப் படுகிறது. அதிலும் குறிப்பாக பருவ நிலை மாற்றம், நிதி திரட்டுதல், மேலும் ஆப்கானிஸ்தானில் அவசர நிலைமைகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

Input & image courtesy:indiatoday

 


Tags:    

Similar News