JP நட்டா-வின் அதிரடி உத்தரவு.. இந்தியாவிற்கு 200 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்!

Update: 2021-06-10 14:00 GMT

தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்ஸின் மற்றும் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகளை மக்கள் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பா.ஜ.க-வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, டிசம்பருக்குள் 19 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடும்  எனவும், அதன்மூலம் டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். 


அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க அலுவலகத்தை காணொலி மூலம் திறந்து வைத்த  ஜே.பி. நட்டா பேசியதாவது "கடந்த ஆண்டு கொரோனா பரவல் முதல் அலையின் போது நம்மிடம் கொரோனா பரிசோதனைக்கு ஒரே ஓரு சோதனைக் கூடம் மட்டுமே இருந்தது. அதில் ஒரு நாளைக்கு 1,500 மாதிரிகள் மட்டுமே சோதனை செய்யும் அளவில் இருந்தது ஆனால், இப்போது நாடு முழுவதும் 2,500 பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. தினசரி சராசரியாக 25 லட்சம் மாதிரிகளை பரிசோதிக்கிறோம்.  பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஆக்சிஜன் உற்பத்தி 900 மெட்ரிக் டன்னில் இருந்து 9,446 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

9 மாதங்களில் இந்தியா இரண்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்திருக்கிறது. இது மிகப்பெரிய சாதனை. இன்று இந்தியாவில் 13 நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 19 நிறுவனங்களாக இது அதிகரிக்கும். இதன்மூலம் இந்தாண்டு டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசிகள் இந்த நாட்டு மக்களுக்கு  கிடைக்கும்." என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News