இந்த வார்த்தை எல்லாம் நாடாளுமன்றத்தில் பேசவே கூடாதா? - வெளியான பட்டியல் என்ன?
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசும் உறுப்பினர்கள் அவையின் மாண்புக்கு எதிரான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அதை லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர் அவைக் குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிடலாம். இந்த நிலையில் பார்லி.,யில் எந்தெந்த வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்ற புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. வரும் 18ம் தேதி கூடவுள்ள மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து இது அமலுக்கு வருகிறது.
அதன்படி, பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய தொகுப்பில்,
வெட்கக்கேடு, துரோகம், ஊழல், ஒட்டுகேட்பு, கொரோனா பரப்புபவர், நாடகம், கபட நாடகம், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய் உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
ஆங்கிலத்தில் ப்ளட்ஷெட், ப்ளட்டி, பிட்ரேட், அஷேம்ட், அப்யூஸ்ட், சீட்டட் ஆகிய வார்த்தைகளும் இந்தியில் சம்சா, சம்சாகிரி, சேலாஸ் போன்ற வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.
'ashamed', 'abused, 'betrayed', 'corrupt', 'drama', 'hypocrisy', 'bloodshed', 'bloody', 'cheated, 'chamcha', 'childishness', 'corrupt', 'coward', 'criminal', 'crocodile tears', 'disgrace', 'donkey', 'drama', 'eyewash', 'fudge', 'hooliganism', 'hypocrisy', 'incompetent', 'mislead', 'lie', 'untrue என்று ஆங்கில அகர வரிசையில் இந்த வார்த்தைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. இவை தாண்டியும் கூட்டத்தொடரின போது அவ்வப்போதைய நிலவரத்திற்கு ஏற்ப சில வார்த்தைகளை சபாநாயகரோ, மாநிலங்களவை துணைத் தலைவரோ அவைக் குறிப்பில் இருந்து நீக்கலாம்.
இந்த நிலையில், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஓ பிரைன், தடை செய்யப்பட்ட வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துவேன், சஸ்பெண்ட் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.
Input From: Hindutamil